Wednesday, June 29, 2011

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பேரவைக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி ஜூன் 29
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பேரவைக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி உழவர்கரை நகர பேரவைக்கூட்டம் பெத்துசெட்டிப்பேட்டையில் நடைபெற்றது. நகர செயலாளர் இ.சத்தியா தலைமையில் நடந்த பேரவைக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் உழவர்கரை நகர கமிட்டியின் புதிய தலைவராக எம்.மாணிக்கம்,செயலாளராக இ.சத்தியா,பொருளாளராக கே.கோமதி உள்ளிட்ட 13 பேர் கொண்ட புதிய கமிட்டி அமைக்கப்பட்டது.மேலும் மத்திய அரசு உயர்த்தியுள்ள சமையல் எரிவாயு,மண்ணென்னை,டீசல் விலைகளை உடடியாக திரும்ப பெற வேண்டும் என இப்பேரவைக்கூட்டத்தில் வலியுருத்தப்பட்டது.