Tuesday, July 12, 2011
புதுச்சேரி பிரதேச 13வது மாநாடு வடமுகத்து செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது
புதுச்சேரி ஜூலை 9
பெண்கள் பிரச்சனையை பேசுவதற்கு புதுச்சேரி சட்டமன்றத்தில் பெண் உறுப்பினரே இல்லாதது வேதனையாக உள்ளது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதாசுந்தராரமன் பேசினார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 13வது மாநாடு வடமுகத்து செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது.கொடிஏற்றத்துடன் துவங்கிய மாநாட்டிற்கு டி.கலைச்செல்வி தலைமை தாங்கினார்.மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் பங்கேற்று பேசுகையில்,புதுச்சேரி சட்டமன்றத்தேர்தல் அன்மையில் நடைபெற்றுது ஆண்வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள புதுச்சேரியில் 30சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லாதாதது.எப்படி பெண்கள் பிரச்சனை சட்டமன்றத்தில் ஒலிக்கும் என்று கேள்வி எழுப்பினார்.பெண்களுக்கான 33சதவீத இடஒதுக்கீடு மசோத நிறைவேராததே இதற்கு காரணம் என்றார்.இன்றைத்கு பெண்கள் பாதிக்ககூடிய பிரச்சனைகளில் தலையிட்டு போராடி வருவதால் புதுச்சேரி உட்பட இருபத்துஇரண்டு மாநிலங்களில் மாதர்சங்கம் பலமான சங்கமாக திகழ்ந்து வருகிறது என்றார்.
மாநாட்டை முடித்து வைத்து சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் S.வாலண்டினா பேசுகையில்,முற்போக்கு எண்ணங்கொண்ட ஆட்சியாளர்கள் இல்லாததால் புதுசேரியில் குடுப்ப வண்முறை தடுப்பு சட்டம் சட்டமாகவே உள்ளது என்று குற்றம்சாட்டினார்.ஆட்சியாளர்களுக்கு எதிராக பெண்களை திரட்டி போராட்டட்ம நடத்துவதோடு புதுச்சேரி முழுவதும் ஜனநாயக மாதர் சங்க கிளைகளை துவக்க சங்கத்தை வலுபடுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.சங்கத்தின் பொறுப்பு செயலாளர் மலர்விழி,நிர்வாகிகள் சுமதி,சாந்தி,மாரிமுத்து,இளவரசி,பூமாதேவி,உள்ளிட்ட இரநுhறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசதலைவராக தெய்வானையும் ,செயலாளராக சத்தியா,பொருளாளராக பரிமளா உள்ளிட்ட ஒன்பது நிர்வாகிகள் உட்பட 18பேர் கொண்ட பிரதேசக்குழு புதிததாக தேர்வுசெய்யப்பட்டது.
தீர்மாணங்கள்
தேசிய நுhறு நாள் வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு உயர்த்திய நாள் ஒன்றுக்கான ரூ119 கூலியை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும். புதுச்சேரியில் செயல்படாத மாநில பெண்கள் ஆணையத்தை செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி அரசு புதிதாக கட்டியுள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் விடுப்பட்ட பணிகளை உடனே செய்து முடிக்க வேண்டும்.மகளிர் சிறப்பு பேரூந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும்.குடுப்ப வண்முறை தடுப்பு சட்டத்தை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் மாநாட்டில் நிரைவேற்றப்பட்டது.
Friday, July 8, 2011
Subscribe to:
Posts (Atom)