Thursday, January 12, 2012
சுய உதவிக் குழுக்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் மாநாடு வலியுறுத்தியுள்ளது
புதுச்சேரி,ஜன-7
சுய உதவிக் குழுக்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் மாநாடு வலியுறுத்தியுள்ளது.
சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் புதுச்சேரி 5வது நகர மாநாடு முருங்கப்பாக்கத்தில் உள்ள மல்லிகா திருமணநிலையத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு நகரதலைவர் ஜி.மலர்விழி தலைமை தாங்கினார்.மாநாட்டு பிரதிநிதிகளை துணைதலைவர் வி.சந்திரா வரவேற்றார்.சமம் இயக்கத்தின் ஆலோசகர் ஆர்.தட்சணாமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.மாநில தலைவர் ஏ.அன்பரசிஜூலியட்,செயலாளர் ஆர்.மாரிமுத்து,மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம்,பள்ளி கல்விதுறையின் மண்டல ஆய்வாளர் ஹேமாவதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.இருதியாக சமம் இயக்க ஆலோசகர் ஆர்.ரமேஷ் மாநாட்டை முடித்து வைத்து பேசினார்.
புதிய தலைவராக ஜி.மலர்விழி,செயலாளராக எம்.மேகலாதேவி உள்ளிட்ட 18பேர் கொண்ட நகரகமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் புதுச்சேரி நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் அனைத்து வழிதடங்கிலும் மகளிர் பேருந்துகளை இயக்க வேண்டும்.கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள்,ஊழியர்கள் காலிபணிகளை நிரப்பி 24மணி நேரம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அநியாய வட்யை வசூல் செய்யும் நுண்நிதி நிறுவணங்களின் நடவடிக்கைகளை கட்டுபடுத்தவும்,கண்காணிக்கவும் மத்திய,மாநில அரசு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. (படம் உள்ளது)
Subscribe to:
Posts (Atom)