Monday, December 31, 2012

பெண்கள் மீதான கொடுமைகளை தடுக்ககோரி சமம் மகளிர் சுயசார்பு இயக்கம் சார்பில் கண்டன அமைதி ஊர்வளம்

புதுச்சேரி,டிச-31
பெண்கள் மீதான கொடுமைகளை தடுக்ககோரி சமம் மகளிர் சுயசார்பு இயக்கம் சார்பில் கண்டன அமைதி  ஊர்வளம் புதுச்சேரியில் நடைபெற்றது.
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான டில்லி மருத்துவ கல்லுhரி மாணவி இறந்ததை கண்டித்தும்.தொடர்ந்து தமிழகம்,புதுச்nசிரி உள்ளிட்ட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை மத்திய,மாநில அரசுகள் தடுக்ககோரியும்,பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாலிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதற்கான சட்டங்களை கொண்டு வரவும் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பெரியார் சிலை எதிரே இருந்து துவங்கிய கண்டன ஊர்வலத்திற்கு சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் தலைவர் இளமதி சாணகிராமன் தலைம  தாங்கினார்.பெண்கள் ஊர்வளத்தை  அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் துவக்கி வைத்து பேசினார்.சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் வாலன்டினா கண்டன உரையாற்றினார்.புதுச்சேரி தலைவர் தெய்வானை,செயலாளர் மாரிமுத்து,துணை தலைவர் சுமதி,சமம் சுயசார்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் சரோஜா,பொருளாளர் மேகலாதேவி,அறிவியல் இயக்க பொருப்பாளர்கள் தட்சணாமூர்த்தி,சேகர்,ரகுநாத்,ரமேஷ்,விஜயமூர்த்தி உள்ளிட்ட திரளான பெண்கள் கருப்பு சின்னம் அனிந்து  இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெரியார் சிலை எதிரிலிருந்து துவங்கி  ஊர்வலம் நேருவீதியை கடந்து தலைமை தபால் நிலையம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.