Monday, June 3, 2013

பிரச்சனைகள் அதிகரிக்கும் போது வேறு வழி இல்லாமல் பெண்கள் மூடநம்பிக்கைகள் பக்கம் திரும்புவது அதிகரித்து வருகிறது என்று டி.ஏ.லதா வேதனையோடு கூறினார்.

புதுச்சேரி,மே-25


 பிரச்சனைகள் அதிகரிக்கும் போது வேறு வழி இல்லாமல் பெண்கள் மூடநம்பிக்கைகள் பக்கம் திரும்புவது  அதிகரித்து வருகிறது  என்று டி.ஏ.லதா வேதனையோடு கூறினார்.

சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் 5வது தமிழ்மாநில மாநாடு புதுச்சேரி நவீன கார்டன் திருமணநிலையத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டுக்கு புதுச்சேரி தலைவர் இளமதி சானகிராமன் தலைமை தாங்கினார்.செயலாளர் சரோஜா பிரதிநிதிகளை வரவேற்று பேசினார்.இம்மாநாட்டை புதுச்சேரி நலத்துறை அமைச்சர் பி.ராஜவேலு துவக்கி வைத்து பேசினார்.

டி.ஏ.லதா
உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக்குழுவின் இணைஅமைப்பாளர் டி.ஏ.லதா மாநாட்டில் பங்கேற்று  கருத்துரை வழங்கி பேசுகையில்,சமூகத்தின் ஒரு அங்கமாக திகழும் பெண்கள் இன்றைக்கு குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஏதாவது ஒரு வேலை செய்து வருமானத்தை ஈட்டிவருகின்றனர்.இந்த நிலையில் தனக்கென்று ஒரு ரூபாய் செலவு செய்வதற்குகூட  முடியாத நிலை தான் இன்றை ஆனாதிக்க சமூத்தில் உள்ளது.இப்படி பிரச்சனைகள் அதிகரிக்கும் போது பெண்கள் அத்தகைய பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கு கடவுள் நம்பிக்கைக்கும்,மூடநம்பிக்கைக பழக்கங்களுக்கு உள்ளாக்கபடுகிறார்கள்.தொலைக்காட்சிளில் ஒளிபரப்பபடும் விளம்பரங்களில் பெண்களை போதை பொருளாக சித்தரிக்கபடுகிறார்கள்.எனவே மத்திய அரசு விளம்பரங்களை தனிக்கைக்கு உட்படுத்தபட வேண்டும்.பாலியல் வன்முறைகளை தடுக்க பாலியல் கல்வியை பள்ளி பருவத்தில் இருந்து மாணவர்களுக்கு கொண்டு வரவேண்டும்.இவ்வாறு லதா பேசினார்.

சமம் மாநில உபக்குழு கன்வீனர்  பி.ராஜமாணிக்கம்,நபார்டு வங்கியின் புதுச்சேரி துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ஸ்ரீபதிகல்குறா,சமம் இயக்க ஆலோசகர் ஏ.ஹேமாவதி,தமிழ்நாடு அறிவியல் இயக்க துணைத்தலைவர் மோகனா,பொதுச்செயலாளர் எஸ்.ஸ்டீபன்நாதன்,செயலாளர் எம்.ராதா, பொருளாளர் எஸ்.சுப்ரமணி,புதுச்சேரி நிர்வாகி ரமேஷ், ஆகியோர்  பங்கேற்று பேசினார்கள்.முன்னதாக சமம் தமிழ்மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜான்சிலிபாய் வேலை அறிக்கையை சமர்பித்தார்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 150க்கும் மேற்ப்ட்ட பிரதிநிதிகளை இம்மாநாட்டில் பங்கேற்றார்கள்.