Friday, October 25, 2013

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவி மீது பாலியல் சீண்டல் நடைபெற்றதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதுச்சேரி,அக்.23-
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவி மீது பாலியல் சீண்டல் நடைபெற்றதை கண்டித்து கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராகிங் மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பாக புதுச்சேரி மத்திய பல்கலைகழக மாணவி அளித்த புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் ராகிங் தடைச்சட்டம் இயற்ற வேண்டும்.அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்,அலுவலகங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும்.புதுச்சேரி மகளிர் ஆணையத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலைவகித்தார்.மாதர் சங்கத்தின் பிரதேச செயலாளர்  மாரிமுத்து,துணைத்தலைவர் சுமதி,மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து , D Y F I  நகரகமிட்டி நிர்வாகி அழகப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மாணவர்கள்,பெண்கள் இப்போராட்டத்தில்  பங்கேற்றனர்.முன்னதாக பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment