Wednesday, March 14, 2012
குறைந்தபட்ச ஊதியம் ரூ.10ஆயிரம் மாத ஊதியமாக வழங்க சட்டம் இயற்ற வேண்டும்
புதுச்சேரி,மார்ச்-13
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதுசசேரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.10ஆயிரம் மாத ஊதியமாக வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.சம வேலைக்கு சம ஊதியம் உறுதிபடுத்த வேண்டும்.பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.பாலியல் துன்புறுத்தல் விசாரணைக்கு குழு அமைக்க வேண்டும்.வீட்டுவேலை செய்யும் பெண் தொழிலாளர்களை முiச்சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடந்த கருத்தரங்கத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் புதுவை அமைப்பாளர் வி.சுமதி தலைமை தாங்கினார்.ஒருங்கிணைப்புகுழுவின் தமிழ்மாநில இணை அமைப்பாளர் டி.ஏ.லதா சிறப்பு அழைப்பாளராக கருத்தரங்கத்தில் பங்கேற்று பேசினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் வாழ்த்தி பேசினார்.அமைப்பின் நிர்வாகிகள் ஆசிரியர் என்.வத்சலா,ஆர்.மாரிமுத்து,ஆர்.கீதா,எஸ்.திலகம்,என்.எஸ்.சுமதி,டி.கலைச்செல்வி,ஜே.சாந்தி,எம்.வள்ளி,ஏ.பாக்கியவதி,எஸ்.செல்வி உள்ளிட்ட திரளான பெண்கள் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment