Sunday, April 1, 2012
சொந்த வீடு இல்லாத மக்களை திரட்டி குடி மணைப்பட்டா பெற்று தரும் இயக்கத்தை நடத்த வேண்டும்
புதுச்சேரி,மார்ச்-31
சொந்த வீடு இல்லாத மக்களை திரட்டி குடி மணைப்பட்டா பெற்று தரும் இயக்கத்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி வலியுறுத்தினார்.
சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் 5வது மாநில மாநாடு புதுச்சேரி நவீனா கார்டன் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு இயக்க தலைவர் எ°.அன்பரசிஜூலியட் தலைமை தாங்கினார்.இணை செயலாளர் சரோஜா தலைவர்களையும் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.
இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சி°ட் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பங்கேற்று பேசினார். அவர் பேசிய விவரம் வருமாறு,
ஆளுகின்ற அரசுகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்பட்டுவருகிறது.பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதில்லை.இன்றைக்கு பெரும்பலான குடும்பங்கள் குடியிருக்க வீடுகள் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.நகரபகுதியில் 42சதவீதம் மக்களுக்கு மட்டுமே வீடுகள் உள்ளது.மற்ற 58சதவீத மக்களுக்கு சொந்த வீடு கூட இல்லை என்பது அரசாங்கத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.அடிப்படை உரிமையை கூட நிறைவேற்றாத அரசுகளை தான் நாம் தேர்வு செய்து வருவதை கவணிக்க வேண்டும்.சென்னையில் பெரும்பலான மக்களுக்கு குடியிருக்க வீடுகள் இல்லை அவர்கள் நடைபாதைகளில் தான் தினமும் உண்ணுவதும் உறங்குவதுமாக இருந்தனர்.அம்மக்களை ஒன்றாக திரட்டி குடிமணைப்பட்டா கேட்டு இயக்கம் நடத்தப்பட்டது.அத்தகைய கோரிக்கையும் கடந்த அரசால் ஏற்றுகொள்ளப்பட்டது.எனவே சமம் பெண்கள் சுயசார்பு இயக்கத்தில் உள்ள அணைவரும் நம் பகுதியில் சொந்த வீடு இல்லாத மக்களின் பட்டியல் தயாரித்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து போராட முன்வரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.
சுதாசுந்தரராமன்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுசெயலாளர் சுதாசுந்தரராமன் பங்கேற்று பேசுகையில்,வட மாநிலங்களில் பெண்கள் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியாத அவலங்கள் தொடர்கதையாக உள்ளது.ஒரு பெண் ஜாதி,மதத்தை கடந்து தான் விரும்பிய நபரை திருமணம் செய்தால் அவர்களை கொள்ளகூடிய சம்பவம் நடக்கிறது.அவர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகி உள்ளது.இது வடமாநிலங்களில் மட்டும் இல்லை தமிழகத்தில்,புதுச்சேரியிலும் இன்னும் தொடர்கதையாக உள்ளது.எங்கெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் சமம் பெண்கள் இயக்கம் முன்னின்று பாதிக்கப்பட்ட பெண்களோடு சேர்ந்து குறல் கொடுத்து போராட முன்வரவேண்டும்.
முன்னதாக அறிவியல் இயக்க தமிழ்மாநில பொருளாளர் இராதா முருகேசன்,நபார்டு வங்கியின்புதுச்சேரி கிளையின் துணை பொதுச்செயலாளர் ஸ்ரீபதிகல்குறா,இந்தியன் வங்கியின் புதுச்சேரி மன்டல முதன்மை மேலாளர் சண்முகநாதன்,அறிவியல் இயக்க பொதுசெயலாளர் சேகர்,மத்திய கலால்துறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.இம்மாநாட்டில் புதிய தலைவராக பல்கலைகழக தமிழ் பேராசிரியை இளமதி ஜானகிராமன்,செயலாளர் சரோஜா,பொருளாளர் தேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment