Saturday, May 19, 2012

புதுச்சேரி,மே-16
வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்ககோரி சிஐடியு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் புதுச்சேரியில் துவங்கியது.
புதுச்சேரியில் வீட்டுவேலை செய்யும் பெண் தொழிலாளர்களை அமைப்புசாரா நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரி இந்திய தொழிற்சங்கம் மையம் சிஐடியு சார்பில் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.இதில்  எந்த முடிவும் எடுக்காத அரசை கண்டித்தும் உடனே நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரி இப்போராட்டம் துவங்கி நடைபெற்ற வருகிறது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் துவங்கிய உண்ணாவிரத போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் தலைமை தாங்கினார்.உண்ணாவிரதத்தை மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் துவக்கிவைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,விவசாயகள் சங்க செயலாளர் பத்மநாபன் ஆகியோர்  போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.சிஐடியு நிர்வாகிகள் ராஜாங்கம்,நிலவழகன்,சுமதி,குணசேகரன்,சிவக்குமார், சீனிவாசன்,மது,நாராயணன்,கலியன்,சதிஷ்பாபு,சக்திவேல்,ராமசாமி,அழகர்ராஜ்,வீட்டு வேலை செய்யும் சங்க நிர்வாகி உஷ்h,உள்ளிட்ட திரளானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.தோடர்ந்து இப்போராட்டம் இன்றும் (வியாழக்கிழமையும்) நடைபெறுகிறது.

Sunday, May 6, 2012

உழைக்கும் பெண்களின் இலவச சிறப்பு மருத்துவ முகாம்


புதுச்சேரி உழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு ( CITU ) , புதுவை அரசு செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் புதுச்சேரி கோவிந்த சாலையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 05 / 05 /2012 மாலை 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு கன்வீனர் தோழர் V சுமதி தலைமை தாங்கினார் , மருத்துவர்கள் Dr ஸ்டாலின் சிவகுருநாதன் மற்றும் Dr லக்ஷ்மியையர் கலந்துக்கொண்டனர் . அரசு செவிலியர் சங்கத்தின் நிர்வாகிகள் T பாக்கியவதி , G சாந்தி முன்னிலை வகித்தனர் , CITU பிரதேச செயலர் K முருகன் துவக்கஉரை ஆற்றினர் , CITU பிரதேச தவைவர் G ராமசாமி , இணை செயலர் S சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழக்கினர். இதில் தோழர்கள் FMRAI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர் ம கலியமூர்த்தி ,உழைக்கும் பெண்களின்நிர்வாகிகள் N வத்சலா , J சாந்தி , வள்ளி , செல்வராணி , முத்து மற்றும் அப்துல்லா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இம்முகாமில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துக்கொண்டு , இரத்த பரிசோதனை மாற்று இலவச மருந்துகள் பெற்றுக்கொண்டனர்.