புதுச்சேரி,மே-16
வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்ககோரி சிஐடியு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் புதுச்சேரியில் துவங்கியது.
புதுச்சேரியில் வீட்டுவேலை செய்யும் பெண் தொழிலாளர்களை அமைப்புசாரா நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரி இந்திய தொழிற்சங்கம் மையம் சிஐடியு சார்பில் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.இதில் எந்த முடிவும் எடுக்காத அரசை கண்டித்தும் உடனே நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரி இப்போராட்டம் துவங்கி நடைபெற்ற வருகிறது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் துவங்கிய உண்ணாவிரத போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் தலைமை தாங்கினார்.உண்ணாவிரதத்தை மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் துவக்கிவைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,விவசாயகள் சங்க செயலாளர் பத்மநாபன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.சிஐடியு நிர்வாகிகள் ராஜாங்கம்,நிலவழகன்,சுமதி,குணசேகரன்,சிவக்குமார், சீனிவாசன்,மது,நாராயணன்,கலியன்,சதிஷ்பாபு,சக்திவேல்,ராமசாமி,அழகர்ராஜ்,வீட்டு வேலை செய்யும் சங்க நிர்வாகி உஷ்h,உள்ளிட்ட திரளானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.தோடர்ந்து இப்போராட்டம் இன்றும் (வியாழக்கிழமையும்) நடைபெறுகிறது.

No comments:
Post a Comment