Sunday, May 6, 2012

உழைக்கும் பெண்களின் இலவச சிறப்பு மருத்துவ முகாம்


புதுச்சேரி உழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு ( CITU ) , புதுவை அரசு செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் புதுச்சேரி கோவிந்த சாலையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 05 / 05 /2012 மாலை 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு கன்வீனர் தோழர் V சுமதி தலைமை தாங்கினார் , மருத்துவர்கள் Dr ஸ்டாலின் சிவகுருநாதன் மற்றும் Dr லக்ஷ்மியையர் கலந்துக்கொண்டனர் . அரசு செவிலியர் சங்கத்தின் நிர்வாகிகள் T பாக்கியவதி , G சாந்தி முன்னிலை வகித்தனர் , CITU பிரதேச செயலர் K முருகன் துவக்கஉரை ஆற்றினர் , CITU பிரதேச தவைவர் G ராமசாமி , இணை செயலர் S சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழக்கினர். இதில் தோழர்கள் FMRAI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர் ம கலியமூர்த்தி ,உழைக்கும் பெண்களின்நிர்வாகிகள் N வத்சலா , J சாந்தி , வள்ளி , செல்வராணி , முத்து மற்றும் அப்துல்லா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இம்முகாமில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துக்கொண்டு , இரத்த பரிசோதனை மாற்று இலவச மருந்துகள் பெற்றுக்கொண்டனர்.

No comments:

Post a Comment