Wednesday, February 13, 2013

பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுக்ககோரி

புதுச்சேரி,பிப்-13
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுக்ககோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் சார்பில் புதுச்சேரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரி முன்பு நடைபெற்ற இவ்வியக்கத்திற்கு சங்கதின் புதுச்சேரி பிரதேச செயலாளர் சத்தியா தலைமை தாங்கினார்.துணைசெயலாளர் ஜெயலச்சுமி மற்றும் மகாலச்சுமி,மாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திரளான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கையெழுத்திட்டனர்.

No comments:

Post a Comment