Friday, March 15, 2013

மகளிர் ஆணையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுன் என்று மாதர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது

புதுச்சேரி,மார்ச்-9
மகளிர் ஆணையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுன் என்று மாதர்
சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைந்திந்திய ஜனநாயக மாதர்
சங்கம்,உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைக்பபுக்குழு,சமம் பெண்கள் சுயசார்பு
இயக்கம் ஆகியோர் சார்பில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் திறந்தவேளி
கருத்தரங்கம் நடைபெற்றது.சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு
கன்வீனர் வி.சுமதி தலைமை தாங்கினார்.மாதர் சங்க பொறுப்பு செயலாளர்
ஆர்.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.சமம் பெண்கள் சுயசார்பு இயக்க
நிர்வாகிகள் சரோஜா,கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் எ°.வாலண்டினா
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.மாநில செயற்குழு உறுப்பினர்
வி.கீதா,ஆசிரியர் சங்க தலைவர் என்.வச்சலா,செவிலியர் சங்க தலைவர்
கீதா,மற்றும் தெய்வானை,கலைச்செல்வி,அன்பரசிஜுலியட்,பச்சையம்மாள் உள்ளிட்ட
இவ்வியக்கங்களை சேர்ந்த பெண்கள் திரளாக இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.
மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுத்திட வர்மாகுழு
பரிந்துறைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.பெண்கள் வேலைசெய்யும்
இடங்களில் அடிப்பiட் வசதிகளை ஏற்படுத்தி பாதுகாப்பு அளிக்க  வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இக்கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment