Sunday, April 1, 2012

குடும்ப வன்முறை தடை சட்டத்தை அமல்படுத்தகோரி


புதுச்சேரி,ஏப்ரல்-1
குடும்ப வன்முறை தடை சட்டத்தை அமல்படுத்தகோரி புதுச்சேரியில் மாதர்சங்கம் சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜி தங்கும் விடுதியில் இளம் பெண் பாலியல் துன்புருத்தலுக்குள்ளான வழக்கில் குற்றவாலிகளை கைது செய்ய வேண்டும்.கானாமல் போன அப்பெண்ணை மீட்க வேண்டும். தானே புயல் நிவாரண தொகையை பாராபட்சமின்றி வழங்க வேண்டும்.பெண்களுக்கு 50சதவீதம் வழங்கும் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை பாதுகாக்க கண்காணிப்பு குழுக்களை உடனெ அமைக்க வேண்டும்.அனுபவம் உள்ள நபரை பெண்கள் ஆனையத்தில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
பெரியார் சிலை எதிரிலிருந்து துவங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க பிரதேச தலைவர் டி.தெய்வானை தலைமை தாங்கினார்.நேருவீPதியை கடந்து தலைமை தபால்நிலையம் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுசெயலாளர் சுதாசுந்தரராமன்,பிரதேச துனைதலைவர் சுமதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.பிரதேச செயலாளர் சத்தியா,நிர்வாகிகள் இளவரசி,பரிமளா,மாரிமுத்து,கலைச்செல்வி,மங்கலட்சுமி உள்ளிட்ட திரளான பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment