புதுச்சேரி,மார்ச்-7
மாதர் சங்க புதிய கிளை உதயம்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை கசாப்புகாரன் தோப்பு பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை புதிய அமைப்புக்கூட்டம் நடைபெற்றது.சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் வி.சுமதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.திரளான பெண்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் புதிய கிளைத்தலைவராக தி.தேவி,துணைத்தலைவராக எஸ்.கலையரசி,செயலாளராக டி.வனஜா,துணைச்செயலளராக ர.பத்மாவதி,பொருளாளராக சாந்தா ஆகியnhர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் காசாப்பு காரன் தோப்பில் புதுச்சேரி நகராட்சி சார்பில் பொதுகழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Saturday, March 9, 2013
Wednesday, February 13, 2013
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுக்ககோரி
புதுச்சேரி,பிப்-13
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுக்ககோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரி முன்பு நடைபெற்ற இவ்வியக்கத்திற்கு சங்கதின் புதுச்சேரி பிரதேச செயலாளர் சத்தியா தலைமை தாங்கினார்.துணைசெயலாளர் ஜெயலச்சுமி மற்றும் மகாலச்சுமி,மாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திரளான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கையெழுத்திட்டனர்.

Monday, December 31, 2012
பெண்கள் மீதான கொடுமைகளை தடுக்ககோரி சமம் மகளிர் சுயசார்பு இயக்கம் சார்பில் கண்டன அமைதி ஊர்வளம்
புதுச்சேரி,டிச-31
பெண்கள் மீதான கொடுமைகளை தடுக்ககோரி சமம் மகளிர் சுயசார்பு இயக்கம் சார்பில் கண்டன அமைதி ஊர்வளம் புதுச்சேரியில் நடைபெற்றது.
பெண்கள் மீதான கொடுமைகளை தடுக்ககோரி சமம் மகளிர் சுயசார்பு இயக்கம் சார்பில் கண்டன அமைதி ஊர்வளம் புதுச்சேரியில் நடைபெற்றது.
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான டில்லி மருத்துவ கல்லுhரி மாணவி
இறந்ததை கண்டித்தும்.தொடர்ந்து தமிழகம்,புதுச்nசிரி உள்ளிட்ட நாடு
முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை மத்திய,மாநில அரசுகள்
தடுக்ககோரியும்,பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாலிகளுக்கு
உடனுக்குடன் தண்டனை வழங்குவதற்கான சட்டங்களை கொண்டு வரவும் இப்போராட்டம்
நடைபெற்றது.
புதுச்சேரி பெரியார் சிலை எதிரே இருந்து துவங்கிய கண்டன ஊர்வலத்திற்கு
சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் தலைவர் இளமதி சாணகிராமன் தலைம
தாங்கினார்.பெண்கள் ஊர்வளத்தை அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் துவக்கி வைத்து பேசினார்.சங்கத்தின்
தமிழ்மாநில செயலாளர் வாலன்டினா கண்டன உரையாற்றினார்.புதுச்சேரி தலைவர்
தெய்வானை,செயலாளர் மாரிமுத்து,துணை தலைவர் சுமதி,சமம் சுயசார்பு
இயக்கத்தின் பொதுச்செயலாளர் சரோஜா,பொருளாளர் மேகலாதேவி,அறிவியல் இயக்க
பொருப்பாளர்கள் தட்சணாமூர்த்தி,சேகர்,ரகுநாத்,ரமேஷ்,விஜயமூர்த்தி உள்ளிட்ட
திரளான பெண்கள் கருப்பு சின்னம் அனிந்து இப்போராட்டத்தில் கலந்து
கொண்டனர்.
முன்னதாக பெரியார் சிலை எதிரிலிருந்து துவங்கி ஊர்வலம் நேருவீதியை கடந்து தலைமை தபால் நிலையம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Saturday, May 19, 2012
புதுச்சேரி,மே-16
வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்ககோரி சிஐடியு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் புதுச்சேரியில் துவங்கியது.
புதுச்சேரியில் வீட்டுவேலை செய்யும் பெண் தொழிலாளர்களை அமைப்புசாரா நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரி இந்திய தொழிற்சங்கம் மையம் சிஐடியு சார்பில் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.இதில் எந்த முடிவும் எடுக்காத அரசை கண்டித்தும் உடனே நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரி இப்போராட்டம் துவங்கி நடைபெற்ற வருகிறது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் துவங்கிய உண்ணாவிரத போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் தலைமை தாங்கினார்.உண்ணாவிரதத்தை மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் துவக்கிவைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,விவசாயகள் சங்க செயலாளர் பத்மநாபன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.சிஐடியு நிர்வாகிகள் ராஜாங்கம்,நிலவழகன்,சுமதி,குணசேகரன்,சிவக்குமார், சீனிவாசன்,மது,நாராயணன்,கலியன்,சதிஷ்பாபு,சக்திவேல்,ராமசாமி,அழகர்ராஜ்,வீட்டு வேலை செய்யும் சங்க நிர்வாகி உஷ்h,உள்ளிட்ட திரளானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.தோடர்ந்து இப்போராட்டம் இன்றும் (வியாழக்கிழமையும்) நடைபெறுகிறது.

Sunday, May 6, 2012
உழைக்கும் பெண்களின் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
புதுச்சேரி உழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு ( CITU ) , புதுவை அரசு செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் புதுச்சேரி கோவிந்த சாலையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 05 / 05 /2012 மாலை 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு கன்வீனர் தோழர் V சுமதி தலைமை தாங்கினார் , மருத்துவர்கள் Dr ஸ்டாலின் சிவகுருநாதன் மற்றும் Dr லக்ஷ்மியையர் கலந்துக்கொண்டனர் . அரசு செவிலியர் சங்கத்தின் நிர்வாகிகள் T பாக்கியவதி , G சாந்தி முன்னிலை வகித்தனர் , CITU பிரதேச செயலர் K முருகன் துவக்கஉரை ஆற்றினர் , CITU பிரதேச தவைவர் G ராமசாமி , இணை செயலர் S சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழக்கினர். இதில் தோழர்கள் FMRAI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர் ம கலியமூர்த்தி ,உழைக்கும் பெண்களின்நிர்வாகிகள் N வத்சலா , J சாந்தி , வள்ளி , செல்வராணி , முத்து மற்றும் அப்துல்லா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இம்முகாமில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துக்கொண்டு , இரத்த பரிசோதனை மாற்று இலவச மருந்துகள் பெற்றுக்கொண்டனர்.
Sunday, April 1, 2012
குடும்ப வன்முறை தடை சட்டத்தை அமல்படுத்தகோரி

புதுச்சேரி,ஏப்ரல்-1
குடும்ப வன்முறை தடை சட்டத்தை அமல்படுத்தகோரி புதுச்சேரியில் மாதர்சங்கம் சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜி தங்கும் விடுதியில் இளம் பெண் பாலியல் துன்புருத்தலுக்குள்ளான வழக்கில் குற்றவாலிகளை கைது செய்ய வேண்டும்.கானாமல் போன அப்பெண்ணை மீட்க வேண்டும். தானே புயல் நிவாரண தொகையை பாராபட்சமின்றி வழங்க வேண்டும்.பெண்களுக்கு 50சதவீதம் வழங்கும் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை பாதுகாக்க கண்காணிப்பு குழுக்களை உடனெ அமைக்க வேண்டும்.அனுபவம் உள்ள நபரை பெண்கள் ஆனையத்தில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
பெரியார் சிலை எதிரிலிருந்து துவங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க பிரதேச தலைவர் டி.தெய்வானை தலைமை தாங்கினார்.நேருவீPதியை கடந்து தலைமை தபால்நிலையம் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுசெயலாளர் சுதாசுந்தரராமன்,பிரதேச துனைதலைவர் சுமதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.பிரதேச செயலாளர் சத்தியா,நிர்வாகிகள் இளவரசி,பரிமளா,மாரிமுத்து,கலைச்செல்வி,மங்கலட்சுமி உள்ளிட்ட திரளான பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
சொந்த வீடு இல்லாத மக்களை திரட்டி குடி மணைப்பட்டா பெற்று தரும் இயக்கத்தை நடத்த வேண்டும்

புதுச்சேரி,மார்ச்-31
சொந்த வீடு இல்லாத மக்களை திரட்டி குடி மணைப்பட்டா பெற்று தரும் இயக்கத்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி வலியுறுத்தினார்.
சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் 5வது மாநில மாநாடு புதுச்சேரி நவீனா கார்டன் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு இயக்க தலைவர் எ°.அன்பரசிஜூலியட் தலைமை தாங்கினார்.இணை செயலாளர் சரோஜா தலைவர்களையும் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.
இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சி°ட் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பங்கேற்று பேசினார். அவர் பேசிய விவரம் வருமாறு,
ஆளுகின்ற அரசுகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்பட்டுவருகிறது.பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதில்லை.இன்றைக்கு பெரும்பலான குடும்பங்கள் குடியிருக்க வீடுகள் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.நகரபகுதியில் 42சதவீதம் மக்களுக்கு மட்டுமே வீடுகள் உள்ளது.மற்ற 58சதவீத மக்களுக்கு சொந்த வீடு கூட இல்லை என்பது அரசாங்கத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.அடிப்படை உரிமையை கூட நிறைவேற்றாத அரசுகளை தான் நாம் தேர்வு செய்து வருவதை கவணிக்க வேண்டும்.சென்னையில் பெரும்பலான மக்களுக்கு குடியிருக்க வீடுகள் இல்லை அவர்கள் நடைபாதைகளில் தான் தினமும் உண்ணுவதும் உறங்குவதுமாக இருந்தனர்.அம்மக்களை ஒன்றாக திரட்டி குடிமணைப்பட்டா கேட்டு இயக்கம் நடத்தப்பட்டது.அத்தகைய கோரிக்கையும் கடந்த அரசால் ஏற்றுகொள்ளப்பட்டது.எனவே சமம் பெண்கள் சுயசார்பு இயக்கத்தில் உள்ள அணைவரும் நம் பகுதியில் சொந்த வீடு இல்லாத மக்களின் பட்டியல் தயாரித்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து போராட முன்வரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.
சுதாசுந்தரராமன்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுசெயலாளர் சுதாசுந்தரராமன் பங்கேற்று பேசுகையில்,வட மாநிலங்களில் பெண்கள் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியாத அவலங்கள் தொடர்கதையாக உள்ளது.ஒரு பெண் ஜாதி,மதத்தை கடந்து தான் விரும்பிய நபரை திருமணம் செய்தால் அவர்களை கொள்ளகூடிய சம்பவம் நடக்கிறது.அவர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகி உள்ளது.இது வடமாநிலங்களில் மட்டும் இல்லை தமிழகத்தில்,புதுச்சேரியிலும் இன்னும் தொடர்கதையாக உள்ளது.எங்கெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் சமம் பெண்கள் இயக்கம் முன்னின்று பாதிக்கப்பட்ட பெண்களோடு சேர்ந்து குறல் கொடுத்து போராட முன்வரவேண்டும்.
முன்னதாக அறிவியல் இயக்க தமிழ்மாநில பொருளாளர் இராதா முருகேசன்,நபார்டு வங்கியின்புதுச்சேரி கிளையின் துணை பொதுச்செயலாளர் ஸ்ரீபதிகல்குறா,இந்தியன் வங்கியின் புதுச்சேரி மன்டல முதன்மை மேலாளர் சண்முகநாதன்,அறிவியல் இயக்க பொதுசெயலாளர் சேகர்,மத்திய கலால்துறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.இம்மாநாட்டில் புதிய தலைவராக பல்கலைகழக தமிழ் பேராசிரியை இளமதி ஜானகிராமன்,செயலாளர் சரோஜா,பொருளாளர் தேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)